எம்.ஜி.ஆர். நினைவுதினத்தை முன்னிட்டு சனிக்கிழமைஅ.தி.மு.க. மவுன அஞ்சலி ஊர்வலம்

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நினைவுதினத்தை முன்னிட்டு சனிக்கிழமை அ.தி.மு.க. மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெறும் என எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-22 18:45 GMT

தூத்துக்குடி அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35-வது ஆண்டு நினைவுதினம் நாளை (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கு இணங்க, அன்றையதினம் காலை 9 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எனது தலைமையில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலம் தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு இருந்து தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறைவு பெறுகிறது. அங்கு உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகர பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், நிர்வாகிகள் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் அவரவர் பகுதிகளில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரின் உருவ படத்தினை அலங்கரித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்