எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
வேதாரண்யத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
வாய்மேடு:
வேதாரண்யத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் வேதாரண்யம் நகர அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.அணி) சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், வேதாரண்யம் நிலவள வங்கி தலைவருமான பி.வி.கே.பிரபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முரளிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகரன், அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் வீரராசு ஹரிகரன், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.