எம்.ஜி.ஆர்.நினைவு நாள்

ராமநாதபுரத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.

Update: 2022-12-25 18:51 GMT

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆலோசனையின்படி ராமநாதபுரம் நகர் அ.தி.மு.க. செயலாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர் செயலாளர் பால்பாண்டியன் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், முன்னாள் நகர்மன்ற தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ராமசேது, ராம்கோ தலைவர் சுரேஷ், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் மாணவரணி செந்தில்குமார், தகவல் தொழில் நுட்ப பிரிவு சரவணகுமார், இளைஞரணி ஸ்டாலின் ஜெயச்சந்திரன், எஸ்.கே.ஜி.சேகர் செல்வராஜ், மகளிரணி ஜெயிலாணி சீனிக்கட்டி, நாகஜோதி, முன்னாள் நகர் செயலாளர் வரதன், நகர்மன்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முனீஸ்வரி, இந்திராமேரி, முன்னாள் கவுன்சிலர்கள் செல்வம், வீரபாண்டியன், தங்கராஜ் நகர் துணை செயலாளர் ஆரிபுராஜா, நகர் பொருளாளர் வேலு மணிகண்டன், நகர் பாசறை செயலாளர் சுப்பு மணிகண்டன், வட்ட செயலாளர் கோகுல கிருஷ்ணன், மாருதி நேதாஜி உள்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்