எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாகொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாகொண்டாப்பட்டது.

Update: 2023-01-17 18:45 GMT

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் 106-வது பிறந்தநாள் விழா நேற்று மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

பிறந்தநாள் விழா

அ.தி.மு.க நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் நேற்று கொண்டாப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கபபட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பின்னர் பழைய மாநராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதே போன்று மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர் உருவப்படம் அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி, ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரநகர்

தூத்துக்குடியில் சிதம்பரநகர் 4-வது தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கும், பின்னர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கும் அ.தி.மு.க அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார்.

எட்டயபுரம்

எட்டயபுரம் நகர அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு நகர அ.தி.மு.க செயலாளர் ராஜகுமார் தலைமையில் நடுவிற்பட்டி அலங்காரி அம்மன் கோவில் தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி செல்வி, சாந்தி, அவை தலைவர் கணபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கான்சாபுரம் பஸ் நிலையம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர்.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் மேடைப் பிள்ளையார் கோவில் அருகில் அ.தி.மு.க. சார்பில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவிற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமை தாங்கினார். விழாவில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகே அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணியினர் சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவிற்கு தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன் தலைமை தாங்கினார்.

கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பில் செய்துங்கநல்லூர் பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் செங்கான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குரும்பூர்-காயல்பட்டினம்

குரும்பூர் பஜாரில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், ராஜநாராயணன், தென்திருப்பேரை நகரச் செயலாளர் ஆறுமுக நயினார் உட்பட கட்சித் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சாயர்புரம் மெயின் பஜாரில் நகர அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நகர செயலாளர் துரைச்சாமிராஜா தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காயல்பட்டினம் நகர அ.தி.மு.க. சார்பில் புதியபஸ் நிலையம் அருகே நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவுக்கு நகர செயலாளர் காயல் மவுலானா தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் பூந்தோட்டம் மனோகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.

ஆறுமுகநேரி பேரூராட்சி அடைக்கலாபுரத்தில் கிளை செயலாளர் செல்வராஜ் தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழாவை முன்னிட்டு,அவரது உருவப்படத்திற்கு நகர முன்னாள் செயலாளர் கே.கே. அரசகுரு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

கோவில்பட்டி

கோவில்பட்டி நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு நகரச் செயலாளர் எஸ். விஜயபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் அன்புராஜ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. ஓ. பன்னீர்செல்வம் அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வினோபாஜி தலைமையில், எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் வெள்ளத்துரை, ஒன்றிய செயலாளர்கள் அக்ரி மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

சசிகலா பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆழ்வார்திருநகரியில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழாவை முன்னிட்டு பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு அ.தி.மு.க. நகரச் செயலாளர் செந்தில்ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகரஅவை தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி

எம். ஜி.ஆர். பிறந்த தின விழாவை முன்னிட்டு ஆத்தூர் மெயின் பஜாரில் நகர அ.தி.மு.க. செயலாளர் சோமசுந்தரம் தலைமையில், அவரது உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் அண்ணாமலை சுப்பிரமணியம், பொருளாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி பால முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நகர அ.தி.மு.க.சார்பில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கும் பஸ் பயணிகளுக்கும் நகர செயலாளர் ரவிச்சந்திரன் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாகுபுரம் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

தெற்கு ஆத்தூரில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் அசோக் சுப்பையா மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினம் பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவிற்கு உடன்குடி ஒன்றிய பொருளாளர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

கழுகுமலை

கழுகுமலை நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு நகர செயலாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார். நகர இளைஞரனி செயலாளர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். தொடர்ந்து பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு நகர செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்