புதிய பள்ளி - வேளாண்மை மைய கட்டிடங்கள்
ஒரத்தநாடு, திருவோணம் ஒன்றியங்களில் புதிய பள்ளி கட்டிடம் மற்றும் வேளாண்மை மைய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு, திருவோணம் ஒன்றியங்களில் புதிய பள்ளி கட்டிடம் மற்றும் வேளாண்மை மைய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
புதிய கட்டிடங்கள்
ஒரத்தநாடு ஒன்றியம் பனையக்கோட்டை கிராமத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் புதிய கட்டிடம், மேல உளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வானியல் ஆய்வகம், திருவோணம் ஒன்றியம் சோழகன்கரையில் துணை வேளாண்மை விரிவாக்கம் மைய புதிய கட்டிடம், கிளாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம், வெட்டுவாக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.
அமைச்சர் திறந்து வைத்தார்
விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். புதிய கட்டிடங்களை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், க.அண்ணாதுரை, என்.அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ, க்கள் எம்.ராமச்சந்திரன், கே.டி. மகேஷ்கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவி உஷா, ஒன்றியக்குழு தலைவர்கள் ஒரத்தநாடு பார்வதி சிவசங்கர், திருவோணம் செல்லம் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.