மேட்டூரில் 23.8 மி.மீட்டர் மழை பதிவு

மேட்டூரில் 23.8 மி.மீட்டர் மழை பதிவு ஆனது.

Update: 2022-10-12 20:22 GMT

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சேலம் மாநகர் மற்றும் புறநகரில் மேட்டூர், வீரகனூர், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக ேமட்டூரில் 23.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வீரகனூர்-20, எடப்பாடி-17.6, சங்ககிரி-13.1, காடையாம்பட்டி-12, சேலம்-10.4, பெத்தநாயக்கன்பாளையம்-5.5, ஏற்காடு, தம்மம்பட்டி-5, ஓமலூர்-4.6, ஆணைமடுவு-3, கரியகோவில்-2.

மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 88 ஏரிகளில் மூக்கனேரி, பைரோஜி ஏரி உள்பட 29 ஏரிகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டி உள்ளன. மேலும் கொட்டவாடி ஏரி உள்பட 8 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. மேலும் 16 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேல் நிரம்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்