மேட்டூர் அணை தண்ணீர் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலம் வந்தடைந்தது

மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலம் வந்தடைந்தது.;

Update: 2023-06-13 18:52 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காலை பாசனத்திற்காக காவிரி ஆற்றில் சுமார் 3 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டார். அணையில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்றார். படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் இரவு சுமார் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் கரூர் மாவட்ட எல்லையான முயல் வழியாக தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலம் பகுதிக்கு தண்ணீர் வந்தடைந்தது. அதனைத்தொடர்ந்து காவிரி ஆற்று தண்ணீர் வாங்கல் வழியாக திருச்சி சென்று கொண்டிருக்கிறது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்