மேட்டுப்பாளையம் -அன்னூர் ரோட்டில் அரசு பஸ் மோதி மூதாட்டி பலி

மேட்டுப்பாளையம் -அன்னூர் ரோட்டில் அரசு பஸ் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-08 14:34 GMT

மேட்டுப்பாளையம்

பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையத் தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி கலாமணி (வயது 60). இவர் மேட்டுப்பாளையம் -அன்னூர் மெயின் ரோடு தாளத்துறை அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியே வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கலாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்