மெட்ரோ ரெயில் பணி: சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
நாளை நவம்பர் 5 முதல் 11 ஆம் தேதி வரை ஒருவார காலத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யட்டு உள்ளது.
அதன்படி டிடிகே. சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு மற்றும் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒருவழி பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.