மெட்ரோ ரெயில் பணி: ஆலந்தூர், பரங்கிமலையில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரெயில் பணி காரணமாக ஆலந்தூர், பரங்கிமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2024-05-28 06:32 IST

சென்னை,

சென்னையை அடுத்த பரங்கிமலை - ஆலந்தூர் ரெயில் நிலையங்கள் இடையே மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி ஆலந்தூர், பரங்கிமலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஜி.எஸ்.டி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம்போல ஆலந்தூர் சுரங்கப்பாதையை நோக்கி இடதுபுறமாக செல்லலாம். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர் எம்.கே.என். சாலை மற்றும் ரெயில் நிலைய சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் நேராக பரங்கிமலை அஞ்சல் நிலையம் நோக்கி செல்ல அனுமதி இல்லை. ஆலந்தூர் சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.எஸ்.டி. சாலையில் செல்வதற்கு வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ செல்லலாம்.

இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் தலைமையில் போலீசார் மற்றும் மெட்ரோ ரெயில் பணியாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்