இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

மிளகாயில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் விமலா விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2023-02-25 18:53 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மிளகாயில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் விமலா விளக்கம் அளித்துள்ளார்.

மிளகாய் சாகுபடி

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

மிளகாய் பயிரில் இலைப்பேனால் பாதிக்கப்பட்ட இலைகளில் சுருக்கங்கள் ஏற்பட்டு இலைகள் மேல் நோக்கி சுருண்டு காணப்படும். இலைக்காம்பு நீண்டு விடும். பூச்சி தாக்கப்பட்ட செடிகள் வளர்ச்சிக்குன்றுவதோடு பூ மற்றும் காய்கள் உற்பத்தி தடைபடுகிறது.

ஊடுபயிராக அகத்தியை பயிரிட வேண்டும். இதன் நிழலானது மிளகாய் பேன் உற்பத்தியை குறைக்கும். சோளம் பயிரிட்ட நிலத்தில் மிளகாயை உடனடியாக சாகுபடி செய்யக்கூடாது. மிளகாயில் வெங்காயத்தை ஊடுபயிராக சாகுபடி செய்யக்கூடாது.

கட்டுப்படுத்தும் முறைகள்

நாற்றுகளில் மீது தண்ணீரை தெளிப்பதன் மூலம் இலைப்பேனின் பெருக்கத்தை குறைக்கலாம்

ஒரு கிலோ விதைக்கு இமிடாகுளோபிரிட் 70 சதவீதம், டபுள்யு எஸ் 12 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இலைப்பேனைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகளான பிப்ரோனில் 5 சதவீத எஸ்.சி 1.5 மி.லி. அல்லது எமாமெக்டின் பென்சோயேட் 5 சதவீத எஸ்.ஜி 4 கிராமை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மருந்துக் கரைசலை தெளிக்கும் போது பயிரில் நன்கு படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளில் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்துக்கரைசலுக்கு ¼ மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் மிளகாயில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்