பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த கூடாது- விவசாயிகள் சங்கம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-08-09 16:33 GMT

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

விவசாயிகள் சங்க மாநாடு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட மாநாடு செம்பனார்கோவிலில் நடந்தது. மாநாட்டிற்கு சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் நாகையா சங்க கொடியினை ஏற்றி வைத்தார். வரவேற்புக்குழு தலைவர் சிம்சன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நாகைமாலி எம்.எல்.ஏ. மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

மாவட்ட பொருளாளர் வைரவன் அரசியல் ஸ்தாபன வேலை அறிக்கையை படித்தார். மாநாட்டு தீர்மானங்களை மாவட்ட துணை செயலாளர் ராயர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், ராமலிங்கம் ஆகியோர் முன்மொழிந்தனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காகித தொழிற்சாலை

வைக்கோலை பயன்படுத்தி காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையை மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்க வேண்டும். விவசாயத்தை நம்பி உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் கல்லூரியையும், மருத்துவக்கல்லூரியையும் அமைக்க வேண்டும். நடமாடும் நெல்கொள்முதல் நிலையத்தை அமைக்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகும் மீத்தேன் உள்ளிட்ட இயற்கை வளங்களை எடுப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்த கூடாது. விவசாயத்தை கேள்விக்குறியாக்கும் மணல் குவாரிகளை மூடவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். அதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயலாளர் சாமி நடராஜன் நிறைவுரையாற்றினார். முடிவில் வரவேற்புக்குழு செயலாளர் மார்க்ஸ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்