வர்த்தகர் சங்க செயற்குழு கூட்டம்
நீடாமங்கலத்தில் வர்த்தகர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் வர்த்தகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் பி.ஜி.ஆர்.ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது.
பொருளாளர் கே.ரமேஷ், துணைத் தலைவர் எஸ்.சாகுல்அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பது, மாதந்தோறும் மின்கட்டணத்தை கணக்கிட வர்த்தகர் சங்கம் சார்பில் தமிழக முதல்-அமைச்சரை கேட்பது, பழைய நீடாமங்கலம் ரோட்டில் கனரக வாகனங்கள் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய இடது பக்கம் சாலையை அகலப்படுத்துவது சம்பந்தமாக மன்னார்குடி டி.ஆா்.பி. ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக செயலாளர் ஜி.வெங்கடேசன் வரவேற்றுப் பேசினார். முடிவில் துணைச் செயலாளர் வேணு.அண்ணாதுரை நன்றி கூறினார்.