வணிகர் தின விழா

முத்துப்பேட்டையில் வணிகர் தின விழா

Update: 2023-05-06 18:45 GMT

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதிய பஸ் நிலையத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு வர்த்தகக்கழகம் அமைப்பு சார்பில் வணிகர் தின விழா நடந்தது. இதில் தலைவர் கண்ணன் தலைமை தாங்கி அமைப்பின் கொடியை ஏற்றி வைத்து பேசினார். தொடர்ந்து வணிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்