தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை;

Update: 2023-05-26 10:28 GMT

வீரபாண்டி

மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்துராஜ் (வயது 55). இவர் திருப்பூர் கல்லாங்காடு 4-வது வீதியில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். மேலும் ஆட்டோவில் எண்ணெய் வியாபாரம் செய்து வந்த முத்துராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், மது குடித்துவிட்டு எண்ணெய் வியாபாரத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் குடிக்க பணம் கேட்டு அவ்வப்போது தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று மதுகுடிக்க பணம் கேட்டு தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் மிகுந்த மனம் உடைந்த முத்துராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-------------

Tags:    

மேலும் செய்திகள்