தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சி

வள்ளியூர் பெட் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-05-05 19:00 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் மதன்குமார் தலைமை தாங்கினார். எம்.பி.ஏ. துறைத்தலைவர் ஜலால் முன்னிலை வகித்தார். மாணவர் அல்தாப் வரவேற்று பேசினார்.

வள்ளியூர் லயன்ஸ் கிளப் தலைவரும், பசுமை கரங்கள் தலைவருமான ஜான் வின்சென்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், தொழில் முனைவோர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஊக்கமளித்து உரையாற்றினார். தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் முகமது பீர் மதார்ஷா தொழில் முனைவு மற்றும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளில் இருந்து எப்படி தொடங்குவது என்பது பற்றி விளக்கி கூறினார்.

மாணவர் ஸ்னோஜென் நன்றி கூறினார். ஏற்பாடுகளை எந்திரவியல் துறை பேராசிரியர் முகமது பீர் மதார்ஷா, கணினித்துறை பேராசிரியர் வள்ளிரதி, மேலாண்மை துறை பேராசிரியர் வாஜித் ரகுமான் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்