மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண் ஏரியில் பிணமாக மீட்பு
வேப்பந்தட்டை அருகே மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.;
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கலைச்செல்வி (வயது 36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கலைச்செல்வி கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. கலைச்செல்வியை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று அயன் பேரையூர் ஏரியில் கலைச்செல்வி பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.