அரசு பள்ளியில் சித்த மருத்துவ முகாம்

திருமக்கோட்டை அரசு பள்ளியில் சித்த மருத்துவ முகாம்

Update: 2023-09-18 18:45 GMT

திருமக்கோட்டை:

திருமக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆயுஷ்மான் பவ மருத்துவ முகாம் திருவாரூர் மருத்துவக்கல்லூரி சிறப்பு பொது நல டாக்டர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் பிரியங்கா, மருத்துவ அலுவலர் ஏழுமலை, சித்த மருத்துவ அலுவலர் நீலா, மாவட்ட கவுன்சிலர் கலைவாணி மோகன், விவசாய சங்க தலைவர் சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துலட்சுமி இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்