மனநல விழிப்புணர்வு ஊர்வலம்

அரியலூரில் மனநல விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-10-10 19:00 GMT

உலக மனநல நாளையொட்டி நேற்று அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் முன்னிலை வகிக்தார். ஊர்வலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தொடங்கி கல்லூரி சாலை, செந்துறை சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை அடைந்தது. ஊர்வலத்தின் போது மாணவர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு மனநலம் பற்றியும், மனநல சிகிச்சை பற்றியும் எடுத்துக்கூறினர். இதில் மருத்துவர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்