ஆண்கள் மேல் நிலைப்பள்ளியை புனரமைக்க வேண்டும்

கண்ணமங்கலம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியை புனரமைக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.விடம் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2022-10-07 11:04 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக பள்ளி தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பள்ளியினை புனரமைக்கவும், பள்ளியில் பேவர் பிளாக் தரை தளம் அமைத்து தரக்கோரியும், முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக பாண்டியன், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோவர்த்தனன், சிந்தியா செல்வம், பள்ளிப்பட்டு பாஸ்கர், தலைமை ஆசிரியர் கருணாநிதி, ஆசிரியர்கள் ராஜா, சுப்பிரமணி, சதீஷ்குமார், மணிவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்