மாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சி

மாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சி

Update: 2022-11-05 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைபள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை பள்ளி பொறுப்பு தலைமையாசிரியை விமலா தொடங்கி வைத்தார். சமூக அறிவியல் மன்ற செயலரும் ஆசிரியருமாகிய ஜோசப் இருதயராஜ் மாணவ, மாணவிகளுக்கு நினைவாற்றல் பயிற்சி அளித்தார். இதில் அனைவரும் கண்களை மூடியவாறு ஆசிரியர் சொல்லும் வரலாற்று நிகழ்வுகள் மற்றும் ஆண்டுகளை சொல்ல சொல்ல மாணவ, மாணவிகளும் கண்களை மூடியவாறு சொன்னார்கள். இது முடிந்ததும் மாணவ, மாணவிகளை அழைத்து கண்களை திறந்து காலக்கோடு ஆண்டு நிகழ்வுகளை சொன்னார்கள். இதன் மூலம் மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தி வரலாற்று நிகழ்வுகள் மற்றும் ஆண்டுகளை அறிந்து கொள்ள முடிந்தது. இதில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்