தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்

நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-04-19 20:57 GMT

நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் தலைமை அலுவலகத்தில் நேற்று பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமையில் பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள் எஸ்.காமராஜ் நாடார், எஸ்.இசக்கிமுத்து (எ) அசோகன் நாடார், ஏ.நயினார் நாடார், கோல்டன் பி.செல்வராஜ் நாடார், ஆர்.கருணாகரன் நாடார், மும்பை கிளைச் சங்க செயலாளர் மைக்கிள் ஜார்ஜ் நாடார், நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.கோபால் ராஜா நாடார், சங்க மேலாளர் ஏ.முருகேசன் உள்பட பலா் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்