போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்த 5 பேர் நினைவு தினம் அனுசரிப்பு
போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்த 5 பேர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது;
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி சிவமணி, ஜெகநாதன், சித்திரவேல், தவசியாண்டி, முத்துமணி ஆகியோர் போலீசாரால் சுடப்பட்டு இறந்தனர். இவர்களது நினைவு தினம் கிராம மக்களால் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நேற்று நடந்த 66-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கீழத்தூவல் கிராம பொதுமக்கள் தேவர் சிலையிலிருந்து மவுன ஊர்வலமாக சென்று கீழத்தூவல் கண்மாய்க்கரையில் அமைந்துள்ள அவர்களது நினைவு தூணில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நினைவிடத்தில் கிராம பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மேலும் அஞ்சலி செலுத்த வரும் அரசியல் கட்சியினர் பொதுமக்களை அனுமதிக்க வேண்டுமென அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.