நினைவுதினம் அனுசரிப்பு:எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நினைவு தினத்தையொட்டி, தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2022-12-24 18:45 GMT

 எம்.ஜி.ஆர். நினைவு தினம் தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சிலை மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்படி, அனுமந்தன்பட்டி, கம்பம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஜக்கையன் தலைமையில், எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், அமைப்புச் செயலாளர் ஜக்கையன் தலைமையில் ஆண்டிப்பட்டியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஏராளமான அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது எம்.ஜி.ஆர். நினைவை போற்றும் வகையில் முழக்கங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்