மேலப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி முற்றுகை

மேலப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி முற்றுகையிடப்பட்டது.

Update: 2022-08-18 20:10 GMT

நெல்லை மேலப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர்கள் இல்லாததால் பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகள் அவதிப்படுகிறார்கள். இதை கண்டித்து அந்த பெண்களின் உறவினர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று அந்த ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

மேலப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக 9 கர்ப்பிணிகள் சேர்க்கப்பட்டனர். ஆனால் கடந்த 5 நாட்களாக அவர்களுக்கு பிரசவம் செய்யாமல் அரசு மருத்துவமனை நிர்வாகம் தட்டிக் கழித்தது. இதனால் 2 பெண்கள் நேற்று தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டனர். மேலும் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பெண்கள் தங்கி உள்ளனர். அவர்களது அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர்கள் வராததால் எங்களால் பிரசவ அறுவை சிகிச்சை செய்ய முடியாது என காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே தமிழக அரசு சுகாதாரத்துறை மேலப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு நிரந்தர மயக்கவியல் டாக்டரை நியமிக்க வேண்டும். மேலும் அனைத்து சிறப்பு சிகிச்சை நிபுணர்களையும் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்