இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேளா
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேளா நடந்தது.;
உளுந்தூர்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நடப்பு கணக்கு சிறப்பு மேளா நடைபெற்றது. வங்கி மேலாளர் இளவரசன் தலைமையில் நடந்த மேளாவில் 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நடப்பு கணக்கை தொடங்கினர். இவர்களுக்கு உடனடியாக பாஸ்புக், காசோலை மற்றும் ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்டது. இதில் வங்கி அதிகாரி சுபகடா சர்க்கார், துணை மேலாளர் விஜயலதா, வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.