மெய்யூர் ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத மெய்யூர் ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார்.

Update: 2022-08-18 17:23 GMT

வாணாபுரம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத மெய்யூர் ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார்.

கிராமசபை கூட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மெய்யூர் கிராமம். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 15-ந் தேதி சுதந்திர தினத்ைத முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதில் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, மின்விளக்கு, விளையாட்டு திடல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

மேலும் இந்த கிராம சபை கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து

பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தும் வெளியேறினார்.

பணியிட மாற்றம்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை உதவி திட்ட இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, பரமேஸ்வரன் மற்றும் வாணாபுரம் போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மெய்யூர் ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத ஊராட்சி செயலாளர் அன்புவை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

அதன்படி அவர் அடிஅண்ணாமலை ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்