மெய்யப்பா வள்ளியம்மை காஞ்சி சங்கரா வித்யாலயா பள்ளியில் கேரம் போட்டி

மெய்யப்பா வள்ளியம்மை காஞ்சி சங்கரா வித்யாலயா பள்ளியில் கேரம் போட்டி நடைபெற்றது.;

Update:2023-08-15 00:07 IST

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வலையப்பட்டி மெய்யப்பா வள்ளியம்மை காஞ்சி சங்கரா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் திருமயம் குறுவட்ட அளவிலான மாணவர்களுக்கான கேரம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சேதுராமன் தலைமை தாங்கினார். பள்ளியின் நிறுவனர் மல்லிகா ஆச்சி முன்னிலை வகித்தார். கேரம் போட்டியினை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராசு தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். முதல்வர் மகாலட்சுமி வரவேற்புரையாற்றினார். இதில் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் நிர்வாக அதிகாரி மகேஸ்வரி மேற்பார்வையில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கணேசன் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முடிவில் குறுவட்டார இணை செயலாளர் பழனிச்சாமி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்