மேகதாது விவகாரம்: கர்நாடகாவின் செயலுக்கு ஆக்கிரமிப்பு என்றுதான் அர்த்தம் - அமைச்சர் துரைமுருகன்

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் செயலுக்கு ஆக்கிரமிப்பு என்றுதான் அர்த்தம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-06-21 14:47 GMT

சென்னை,

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

கே.ஆர்.சாகர், கபினி அணைகளுக்கு கீழ் உள்ள இடங்களில் தண்ணீர் எங்களுக்கு சொந்தமானது. அதில் தடுப்பணை கட்டுவது ஆக்கிரமிப்பு. கர்நாடகாவின் இந்த செயலுக்கு ஆக்கிரமிப்பு என்றுதான் அர்த்தம்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க உரிமை இல்லை. வழக்கறிஞர்கள் கருத்து கேட்டு அதன் படி செயல்படுவது முறையல்ல.

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவில் பாஜக நிலையில் மத்திய அரசு செல்லக்கூடாது. இதில் மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்