குமரி மாவட்டத்தில் மெகா முகாம்:

குமரி மாவட்டத்தில் மெகா முகாம்: ஒரே நாளில் 19237பேருக்கு தடுப்பூசி

Update: 2022-09-18 18:45 GMT

நாகர்கோவில், 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்றும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், முதல் தவணை செலுத்தியவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசியும், 2 தவணை செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

நாகர்கோவில் நகரில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், வடசேரி, கிருஷ்ணன்கோவில், வடிவீஸ்வரம், தொல்லவிளை, வட்டவிளை ஆகிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் என 50 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடந்தன. பஸ் நிலையப் பகுதிகளில் பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தியதை காண முடிந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 1400 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடந்தது. இதற்காக 375 மருத்துவக் குழுவினர் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர்.

நேற்று காலை 7 மணி முதல் இரவு மணி வரை நடந்த இந்த தடுப்பூசி முகாமில் 19237 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்