சைகை மொழி பயிற்சி அளிப்பது குறித்த கூட்டம்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மொழி பயிற்சி அளிப்பது குறித்த கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-16 18:44 GMT

கரூர் வட்டார அளவிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மொழி பற்றி பயிற்சி அளிப்பது குறித்த ஆசிரியர்களுக்கான கூட்டம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு உதவித்திட்ட அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மொழி பயிற்சி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை உறுதிமொழியை எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யாவதி, ஒருங்கிணைப்பாளர் சுசீலா ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியை சிறப்பு ஆசிரியர்கள் ஞானசெல்வி, இமாகுலேட், இயன்முறை மருத்துவர் புண்ணியா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்