ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கூட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-25 18:50 GMT

கரூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 6-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வெங்கடாசலம் வரவேற்றார். மாநில தலைவர் ரமேஷ் சிறப்புரை ஆற்றினார். இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் சுப்பிரமணியனின் தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்து ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டது போல் 1.1.2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை ரொக்கமாக வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் சரிதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்