சென்னையில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் - ரேசன் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்
ரேசனில் வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் எடை ஆகியவற்றை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தினார்.;
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ரேசனில் வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் எடை ஆகியவற்றை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் பொங்கல் பரிசுத்தொகை, பொது விநியோகத்திட்டம், நெல்கொள்முதல் மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.