கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டம்

Update: 2023-06-06 19:30 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் அனுமந்தராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவி பெருமா, மாவட்ட துணைத்தலைவர் வேலு, மாவட்ட துணை செயலாளர் வரதராஜ், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும். 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளின் நினைவாக வருகிற ஜூலை மாதம் 5-ந் தேதி கிருஷ்ணகிரியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது. இதில் அனைத்து விவசாயிகளும் கலந்துகொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் அசோக்குமார், மாவட்ட துணை செயலாளர் சக்திசங்கர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணிமேகலை, மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்