தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம்

அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-05-20 21:12 GMT

அதிராம்பட்டினம்;

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் அமைப்பின் அதிராம்பட்டினம் கிளை சார்பாக அதிராம்பட்டினத்தில் பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பஷால் மைதீன் தலைமை தாங்கினாா். மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், பொருளாளர் அப்துல்அமீது, துணை தலைவர் வல்லம் ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் "இந்தியா அன்றும் இன்றும் " என்ற தலைப்பிலும், மாநில பேச்சாளர் அப்துர்ரஹ்மான் பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம்"என்ற தலைப்பிலும் பேசினர். முடிவில் யாசர் நன்றி கூறினார்.கூட்டத்தில் செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை அதிராம்பட்டினத்தில் நிறுத்தி இயக்க வேண்டும்.தமிழ்நாட்டில் சாராயத்தை ஒழித்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்