அதியமான்கோட்டையில் மாற்று சங்கத்தினர் தொ.மு.ச.வில் இணையும் நிகழ்ச்சி

Update: 2023-05-02 18:45 GMT

நல்லம்பள்ளி:

அதியமான்கோட்டையில் உள்ள கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் மாற்று சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 50 பேர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் தலைமை தாங்கினார். பின்னர் அவர் மாற்று சங்கத்தில் இருந்து விலகிய நல்லம்பள்ளி, சேசம்பட்டியை சேர்ந்தவர்களுக்கு தொ.மு.ச.வில் இணைவதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் சின்னதுரை, அன்புமணி, சண்முகராஜ், சேகர் மற்றும் பம்பை கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், ராஜாமணி, ரமேஷ், மாரியப்பன், தி.மு.க. நிர்வாகிகள் அன்பு, எல்லப்பன், அண்ணாதுரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்