சாயல்குடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம்

சாயல்குடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.

Update: 2023-04-29 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடி பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார்.

கூட்டத்தில் துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், சாயல்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில் உள்ள இடத்தை சுத்தம் செய்து அப்பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதேபோல் பேரூராட்சி உறுப்பினர்கள் சாலை, குடிநீர், பொது மயானம், குளியல் தொட்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் தொடர்பாக பேசினர்.

இதில், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் காமராஜ், அழகர் வேல் பாண்டியன், மாணிக்கவேல், குமரையா, சண்முகத்தாய் சுப்பிரமணியன், ஆபிதா அனிபா, இந்திரா செல்லத்துரை, மாணிக்கவள்ளி பால்பாண்டியன், இந்திராணி, பானுமதி உள்ளிட்டோர் தங்கள் வார்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். 

Tags:    

மேலும் செய்திகள்