சோழவந்தான் பேரூராட்சி மாதாந்திர கூட்டம்

சோழவந்தான் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது.;

Update: 2023-04-28 19:12 GMT

சோழவந்தான், 

சோழவந்தான் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சகாயஅந்தோணியூசின் முன்னிலை வகித்தார். சுகாதாரப்பணி ஆய்வாளர் முருகானந்தம் வரவேற்றார். இளநிலைஉதவியாளர் பேரூராட்சி நடந்தேறிய திட்டங்கள் குறித்தும், நடைபெறக்கூடிய திட்டங்கள் குறித்தும் அறிக்கை வாசித்தார். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட புதிதாக கட்டியுள்ள பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.சோழவந்தான் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது.தி.மு.க. கவுன்சிலர்கள் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில், வசந்திகணேசன், சரண்யா கண்ணன், கணேசன், ரேகாராமச்சந்திரன், சண்முகபாண்டியராஜா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட பஸ் நிலையம் என்பதால் அதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்று கோரி வெளிநடப்பு செய்துள்ளதாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்