விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-08 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் திருவாடானை ஆர்.எஸ். மங்கலம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை நடவடிக்கை இல்லை. எனவே நாளை(திங்கட்கிழமை) ராமநாதபுரத்தில் கலெக்டரை நேரில் சந்தித்து திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 17-ந் தேதி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்