எருமப்பட்டி:
எருமப்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் பழனியாண்டி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாதாந்திர வரவு, செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் சாலை அமைக்கும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி துணைத்தலைவர் ரவி, இளநிலை உதவியாளர் சுரேஷ் ராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.