ராமநாதபுரத்தில் மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீனவர்களுக்கான நிவாரணம், பழுதடைந்த படகுகளுக்கு உரிய பராமரிப்பு நிதி, மீனவ பெண்களுக்கு சுழல்நிதி கடனுதவி, பழுதடைந்த மீன்பிடித்தலங்கள் புதுப்பித்தல், கடலில் மீன் பிடிக்க சென்ற போது இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் போன்ற கோரிக்கைகள் குறித்து மீனவர்கள் கொடுத்த 60-க்கும் மேற்பட்ட மனுக்களின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் அப்துல் காதர் ஜெய்லானி, கோபிநாத், கடற்படை கிழக்கு மண்டல அலுவலர் சவுரவ் சிங், துணை மண்டல அலுவலர் புவனேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.