மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை கூட்டம் நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை தாலுகா குஞ்சங்குளம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை கூட்டம் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமு, தாலுகா குழு உறுப்பினர் அருள்சாமி, கிளை செயலாளர் செல்வம் ஆகியோர் பேசினர். மங்கலக்குடி-திருவாடானை சாலையில் இருந்து வெளியங்குடி முதல் காட்டியனேந்தல், பாசானி, அரசுத்தூர் வழியாக பெருவாக்கோட்டை செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. பொதுமக்களின் போக்குவரத்திற்கும், வாகன போக்குவரத்திற்கும் சிரமமாக உள்ளது. எனவே இந்த சாலையை புதிய தார்சாலையாக அமைத்து தர வேண்டும். இந்த சாலையில் இருந்து பிரிந்து குஞ்சங்குளம் ஆற்றங்கரை குடியிருப்பு செல்லும் சாலையும் முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையையும் புதிய தார்சாலையாக அமைத்து தர வேண்டும். வெளியங்குடி விலக்கு சாலையில் இருந்து பெருவாக்கோட்டை செல்லும் சாலையில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.