காவேரிப்பட்டணம் ஒன்றியக்குழு கூட்டம்

காவேரிப்பட்டணம் ஒன்றியக்குழு கூட்டம்

Update: 2023-01-01 18:45 GMT

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் பையூர் பெ.ரவி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வரதன் ஆண்டறிக்கை வாசித்தார். மேலாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. முடிவில் ஒன்றியக்குழு துணை தலைவர் சசிகலா தசரா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்