தர்மபுரியில் அரசு பணியாளர் சங்க செயற்குழு கூட்டம்

Update: 2022-12-18 18:45 GMT

தர்மபுரி:

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நிர்மல் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில துணை தலைவர் கோவிந்தன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர் கே.மணி, மாவட்ட தலைவர் பழனி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ள மண்டல அளவிலான தர்ணா போராட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரை சந்தித்து முறையிடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் என்.கிருஷ்ணன், பாலமணிகண்டன், நரசிம்மன், செல்வி மற்றும் மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்