பர்கூர்
பர்கூர் பஸ் நிலையத்தில் தி.மு.க. சார்பில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பர்கூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர்கள் மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம், ஆவடி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் சுகவனம், தெற்கு ஒன்றிய செயலாளர் அறிஞர், பர்கூர் நகர செயலாளர் வெங்கட்டப்பன், பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.