பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை

பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-11-06 14:56 GMT


ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் சுரேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பருவமழை தொடங்கி உள்ளதால் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் பாதிக்காத வகையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் செல்லும் வழிகளை சரிசெய்து தண்ணீர் தேங்காமல் செல்லும் வகையில் துரிதமாக செயல்பட வேண்டும். தண்ணீர் செல்ல முடியாத பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி கடத்த வேண்டும். மழைவெள்ள நீரை அகற்றுவதோடு கொசுக்கள் பெருகி விடாமல் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆபத்தான மின்கம்பங்கள் குறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்பாதிப்பு ஏற்படாத வகையில் கவனமாக செயலாற்ற வேண்டும். நகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பு அளித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்