ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-20 18:45 GMT

காளையார்கோவில்,

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றிய குழுத்தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்யன், ராஜேஸ்வரி, துணைத் தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை பற்றி கேள்வி எழுப்பினர். அனைத்து துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டால் தான் மக்களின் குறைகளை பற்றி தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தனர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்யன், ராஜேஸ்வரி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன் ஆகியோர் பதில் அளித்தனர். கூட்டத்தில் வேளாண்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்