மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்

மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2022-09-11 15:53 GMT

தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மின்கட்டண உயர்வை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். பென்னாகரம் அருகே குழிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி, அவருடைய மனைவி, 2 குழந்தைகள் ஆகியோரை சோதனை என கூறி வனத்துறையை சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்