மீனவர் சங்க சிறப்பு மகாசபை கூட்டம்

பாலக்கோட்டில் மீனவர் சங்க சிறப்பு மகாசபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-16 19:30 GMT

பாலக்கோடு:

பாலக்கோட்டில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் பாலக்கோடு கே.கே.199 பருவத ராஜ குல மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை உறுப்பினர்களுக்கான சிறப்பு மகாசபை கூட்டம் சார்நிலை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் பதிவை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல், காலாவதியான உறுப்பினர்களை நீக்குதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சங்க வரவு, செலவு கணக்குகளை சங்க செயலாட்சியர் சுதா வாசித்தார். இதில் மீனவர் சங்க தலைவர் விமலன், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்