தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 21-ம் நூற்றாண்டில் கற்பித்தல் அணுகுமுறைகள் குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களிடையேயான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. புது தில்லி விஞ்ஞான் பிரசார் முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ஆசிரியர்கள் தங்களது கடமையை உணர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும். அறிவியல் முன்னேற்றங்களால் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதற்கு தகுந்தார் போல் ஆசிரியர்கள் திறன்களை வளர்த்துக் கொண்டு, மாணவ, மாணவிகளின் திறன்களையும் வளர்க்க வேண்டும் என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முனைவர் மான்விழி, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் கேசவகுமார், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெயபிரகாசம், அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.